சயன்ஸ் கூறும் சுற்றுச்சார்பின் சமச்சீர்நிலை [Ecological Balance] குறித்து அறிந்திருப்போம்.
´ஒன்றைச் சார்ந்தே ஒன்று வாழ்கிறது´ என்னும் உயிர்நிலை கோட்பாட்டின் சங்கிலி தொடர் போன்ற சார்பு ஓட்டத்தில் உடைக்க முடியாத அல்லது மாற்ற முடியாத சமச்சீர்நிலை.
´மண்ணில் வாழும் உயிர் வர்க்கங்கள் இறுதியில் மண்ணோடு கலந்து வட்டம் முழுமையாகும் போது நிறைவடையும் சங்கிலித் தொடர் போன்றது நிகழ்வுகள்.
இந்த அடிப்படையை உணராது முரண்படும் சூழலில் ஏற்படும் சமூக விளைவுகளாக யுத்தம், கலவரம், கொலை, தீவிரவாதம், இனபாகுபாடு என தொடர்ச்சியாய் முட்டி மோதி தெறிக்கும் குருதியில் தான் இன்றைய நாகரிக மனிதனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?
இதை எப்படி மாற்ற முடியும்?
நாடு, இனம், மொழி கடந்த மனித நேயத்தை முன்னிருத்தி சமச்சீர்நிலை ஓட்டத்தை மனிதனின் சிந்தனைக்குள் கொண்டு வருவதென்பது சாத்தியமா?
இன்றைய மனிதனிடம் சமச்சீர்நிலை என்பது சாத்தியப்படுமா?
´முடியாது´ என்கிறது சயன்ஸ்.
´மண்ணும், பொன்னும் அடிப்படையில் அணுக்கள்.´
´மனிதனும் மற்ற உயிர்களுக்கும் அடிப்படை இயக்கம் மரபணுக்கள்.´
இதில் மனிதன் தெளிவடைய வேண்டும். அறிவு விருத்தி அடைய வேண்டும். ஆளுமை உணர்ச்சியை எடை போட வேண்டும்.
இவையெல்லாம் நடக்கின்ற காரியமா?
உயிர்நிலை கோட்பாட்டின் அடிப்படையில் மனிதன் மிருக நிலையில் இருந்து சற்று முன்னேறி அடுத்த நிலைக்கு வந்திருக்கிறானே தவிர, அவனுக்குள் இன்னும் மிருகநிலையில் இருந்து மீளவில்லை. இன்னும் பல படிகளை மனிதன் கடக்க வேண்டும் என்கிறது சயன்ஸ்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சோதனைச் சாவடியில் இருக்கும் ´சோதனை எலிகள்´ போன்றவர்கள் இன்றைய மனிதர்கள்.
நன்றி - தமிழச்சி
No comments:
Post a Comment