இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர்.
இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள்.
எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர்.
அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு.
இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார்.
39 பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம்.
இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், நிவாரணமும் பெறாதவர்கள்.
குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார் தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர்.
கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், மரக்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது.
இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது.
ஒரு வேளை உணவுக்காக அரிசி மட்டும் 220 இறாத்தல் பொங்க வைக்க வேண்டும் குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி.
தினசரி மற்ற மனைவிமார் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்மார், மகள்மார் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார்.
இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன.
இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு ச்சானா என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை.
இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது.
இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எப்போதும் இள வயது மனைவிமாரைத்தான் தன்னைச் சூழ அருகில் வைத்துக் கொள்வார். மனைவிமாருக்கு வயது போகப்போக தூரமும் அதிகரிக்கும்.
இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எனபது அவர்களின் நம்பிக்கை.
Thanks - Tamil CNN
No comments:
Post a Comment