22 Feb 2011

பாஸ்ட்புட் உணவு: குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம்



இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் விரைவான பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர்.
உணவு வழக்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரளிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எழும்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உணவு உண்பதில்லை என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்ப்பதால் இரண்டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பாஸ்புட்(ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

Thanks - Lankasri

No comments:

Post a Comment

Twitter Bird Gadget