2 Mar 2011

ஏப்ரல் 13 இல் தமிழக, கேரள தேர்தல்




தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளன.
``தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் அறிவிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியாகும், தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 13. தமிழ்நாடு, கேரளத்தைப் போல, புதுச்சேரியும், அதே தேதியில் தேர்தலைச் சந்திக்கும்,’’ என்றார் தேர்தல் ஆணையர் குரேஷி.
தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30. வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்படும்.
தமிழ்நாட்டில் நாலரைக் கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களும், புதுவையில், 80 லட்சம் வாக்காளர்களும், கேரளத்தில் 2.29 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7 மற்றும் மே 10 ஆகிய நாட்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
அஸ்ஸாம் மாநிலத்தில், ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமிலும் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும்.
முதல் முறையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தத் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில், முதல் முறையாக, வாக்காளர்கள் புகார் தெரிவிக்க, கால்சென்டர் எனப்படும் அழைப்பு ஏற்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 1965 என்ற எண்ணில் அந்த மையங்களுடன் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் என குரேஷி தெரிவித்தார்


No comments:

Post a Comment

Twitter Bird Gadget