1 Mar 2011

பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்!



அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார்.
தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன. அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார்.
பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி என அவர் தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். பூமி மிகவும் அதிசயமானது என்றும் வர்ணித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் மதிப்பு வெறும் ரூ.7 லட்சம் மட்டுமே என்றும் வெள்ளி கிரகத்தின் மதிப்பு அதை விட குறைவு என்றும் அவர் கணக்கிட்டுள்ளார். வான்வெளியில் 1235 க்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ளன. அவை வாழ தகுதியற்றவைகளாக உள்ளன. இதனால் அவை மதிப்பற்றவைகளாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.
Thanks-Lankasri 

No comments:

Post a Comment

Twitter Bird Gadget