மக்கா தலைமை இமாமும் சவூதி மேல்மட்ட மத அறிஞர் சபையின் தலைவருமானஷேக் அப்துல் அஸீஸ் அப்துல்லா ஆல் அல் ஷேக், அரபு நாடுகளில் கிளர்ச்சி என்னும் பெயரில் முஸ்லிம் மத விரோதிகள்
கை வரிசை காட்டுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
" இந்த கிளர்ச்சிகளின் நோக்கம் சமுதாயத்தை பிளவுக்கும் குழப்பத்திற்கும் உட்படுத்தி தங்கள் 'வசத்தில்' எடுத்துக்கொள்வதே ஆகும் " என்றார் அவர்
"புதுமை என்ற பெயரில் குழப்பங்களை கொண்டு வருவது முஸ்லிம்களின் இயல்பிலில்லை" என்றார் தலைமை இமாம்.
சவூதி அரபிய அரசாலோசனை குழும(ஷூரா கவுன்சில்) பாதுகாப்பு அவை உறுப்பினர் டாக்டர்.நவாஃப் அல் ஃபகம் கூறுகையில்,
"ஷரியா சட்டத்தின் படி இயங்கும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பதன் காரணம் அவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலேயே தவிர கருத்துரிமைக்கு எதிர்ப்பென்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
நன்றி-இந்நேரம்
No comments:
Post a Comment