7 Mar 2011

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் மூட்டைப் பூச்சியால் கடும் தொல்லையை அனுபவித்த பெண்!




பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் மூட்டைப்பூச்சிகளால் கடிக்கப்பட்டு தொல்லையை அனுபவித்த அந்த விமான சேவையின் வழமையான பயணி சேன் செல்கர்க் அது சம்பந்தமான படங்களை இணையத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

ஜனவரி மாதம் 28ம் திகதி லொஸ் ஏன்ஜல்ஸிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் விமானத்திலேயே இவருக்கு இந்த தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 

விமானத்துக்குள் இவருக்கு வழங்கப்பட்ட போர்வையிலேயே இந்த மூட்டைப் புச்சிகள் இருந்துள்ளன. இவர் போர்த்திக் கொண்டதும் அவரின் உடைகளிலும் அவை தொற்றிக் கொண்டு உடம்பின் பெரும் பகுதியைப் பதம் பார்த்துள்ளன. 

28 வயதான இந்தப் பெண் இந்த விமான சேவையின் வழமையான ஒரு பயணி ஆவார். 



பெங்களூர் மற்றும் ஹீத்ரு விமான நிலையங்களில் இவர் இது பற்றி முறையிட்டபோதிலும் இவருக்கு எவ்வித உதவியையும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

இந்த மூட்டைப் பூச்சிகள் எல்லாமே மிகவும் கொழுத்துப் போய் இரத்த வெறியுடன் காணப்பட்டதாக செல்கர்க் தனது இணையத்தளப் பக்கத்தில் எழுதியுள்ளார். 

விமானத்துக்குள்ளும் விமான ஊழியர்களிடமிருந்து எவ்வித உதவியும் தனக்குக் கிடைக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.


நன்றி-தமிழ் சிஎன் என்.

No comments:

Post a Comment

Twitter Bird Gadget