20 Mar 2011

லிபியா மீதான போர் துவங்கியது:அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் லிபியா மீது குண்டு வீச்சு?



லிபியா அருகே அமெரிக்கா தயாராக நிறுத்தி வைத்திருந்த விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின.

41 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆனால் மக்கள் புரட்சிக்கு அடிபணியாத கடாபி அவர்கள் மீது அடக்கு முறைகளை கையாண்டார். போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

புரட்சி படையினர் 4 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அந்த நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசி 3 நகரங்களை ராணுவம் மீட்டது. இன்னொரு முக்கிய நகரமான பென்காசி நகரத்தை பிடிக்கவும் விமான தாக்குதல் நடந்து வந்தது.

ராணுவ தாக்குதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை அதிபர் கடாபியை கேட்டுக் கொண்டது. அதே போல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கடாபிக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கடாபி இதை ஏற்கவில்லை.

தொடர்ந்து ராணுவ தாக்குதலை நடத்தி வந்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி இதுபற்றி ஆலோசனை நடத்தியது. அப்போது லிபியா பொதுமக்களை காப்பாற்ற ராணுவ நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, லிபியா மீது தாக்குதல் நடத்த தயாரானது. இது தொடர்பாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, போன்ற நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தியது.

நிலைமை மோசமானதை தொடர்ந்து கடாபி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தார். ஆனாலும் பென்காசி நகரை மீட்க தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடந்து வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, லிபியா மீது திடீர் போர் தொடுத்தது. லிபியா அருகே அமெரிக்கா விமானந்தாங்கி போர் கப்பல்களை தயாராக நிறுத்தி வைத்திருந்தது. அதில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் லிபியா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. கப்பலில் இருந்து ஏவுகணைகளும் வீசப்பட்டன. அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பிரான்சு நாடுகளும் சேர்ந்து லிபியா மீது தாக்குதலை நடத்தின.

தலைநகரம் திரிபோலி, மற்றும் பென்காசி, சிர்ட், பிசரதா, சுவாரா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வீசப்பட்டன. இவை தவிர லிபியா படைகள் முகாமிட்டுள்ள பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடந்தன. மொத்தம் 20 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.லிபியாவை சுற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா நாடுகளில் 25 போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து 110 ஏவுகணைகள் லிபியா மீது ஏவப்பட்டன.

லிபியா மீது முதல் முதலில் பிரான்சு விமானம் தான் குண்டு வீசியது. அதை தொடர்ந்து மற்ற நாட்டு விமானங்கள் குண்டு வீசின. குண்டு வீச்சில் லிபியாவின் ஏராளமான ராணுவ டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூட்டுப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.   ஆனால் இதை லிபியா மறுத்து உள்ளது.

அமெரிக்க கூட்டு படைகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 48 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என்று லிபியா அறிவித்து உள்ளது. அமெரிக்கா போர் தொடுத்ததும் அதிபர் கடாபி வானொலியில் செய்தி ஒன்று வெளியிட்டார். அவர் கூறும் போது மேற்கத்திய நாடுகள் நமது நாட்டில் தங்கள் காலனியாக அடிமைப்படுத்த போர் தொடங்கி உள்ளன.

இதை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றார். அமெரிக்கா கூட்டு படைகள் தாக்குதல் தொடர்வதை வரவேற்கும் வகையில் புரட்சி படையினர் தெருக்களில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லிபியா மீது அமெரிக்கா கூட்டு படைகள் தாக்கியதற்கு இந்தியா, சீனா, மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.


No comments:

Post a Comment

Twitter Bird Gadget