சீனாவில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு குழந்தை திட்டம், வரும் காலங்களில் விலக்கி கொள்ளப்பட உளளது. அரசின் இந்த முடிவால் சீன மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
சீன அரசு தன்னுடைய நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தை திட்டத்தை கடந்த 1970ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்தது.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றால் பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை மற்றும் சலுகைகள் ரத்து போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சட்டம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்ட வரப்போவதாக நேஷனல் கமிட்டி ஆப் பாப்புலேசன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் துணை இயக்குனர் வாங்க்யூகிங் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வமைப்பின் மற்றொரு இணை இயக்குனரான ஜாங்லீ என்பவர் கூறுகையில் ஒரு குழந்தை திட்டத்தால் இளைஞர் மற்றும் வயதானவர்களின் இடையேயான எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.கடந்த 2009ஆம் ஆண்டில் உள்ள வயதானவர்களின் எண்ணிக்கை 8.5 சதவீதமாக இருப்பது வரும் 2030 ஆண்டுகளில் 17.5 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று அரசு அஞ்சுவதே ஒரு குழந்தை திட்டத்தை மாற்றி அமைப்பதன் நோக்கமாகும்.
நன்றி-இந்நேரம்.
No comments:
Post a Comment